காட்டுச்செடிகளுக்குக் கவனிப்பு இல்லைதான்

kaattuchedi

 

கொன்றை, செவ்வந்தி

கோழிக்கொண்டை, அரளி என்று

வண்ணவண்ணப் பூச்செடிகள்

வரிசைவரிசையாய்

 

அலுவலக வளாகத்தில்

அவற்றுக்கு நல்ல கவனிப்பு.

உரிய நீர், உரம், ஊட்டம்.

 

மார்ச் மத்தியில்

ஒதுக்கீட்டுநிதியைச் செலவழித்துமுடிக்க

குத்துச்செடிகளை ஒட்டநறுக்கி

குறுஞ்செடிகளைப் கொத்தாகப்பிடுங்கி

புதுச்செடிகள் நடுவார்கள்

25/12/13

காட்டுச்செடிகளுக்குக் கவனிப்பு இல்லைதான்