
வா: “எனக்குச் சுத்திவளைச்சுப் பேசுறது பிடிக்காது. கொஞ்சம் சொல்ல வந்ததை நேரடியா சொல்றிங்களா?”
அ: “கட்டாயமா! நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி!. அப்படி நேரடியாப் பேசுறதுக்கே உரிய சில சாதகங்கள் உண்டுன்னாலும் அது எல்லா நேரத்துலயும் நல்ல விளைவுகளை ஏற்படுத்திறதில்லைங்கிறதையும் உண்மை சுடும் என்பதையும் அனுபவப்பூர்வமா எல்லாருமே உணர்றோம்தான் இல்லயா?”
வா: “இனிக்கிற விஷத்தைவிட கசக்கிற மருந்து நல்லது”
அ: “நான் நெனைச்சத சொல்லிட்டீங்க! மருந்துலயும் இனிப்பு தடவிக் கொடுக்கிற வழக்கம் அந்த துறைசார்ந்து நெடுங்காலமா நிலவிவருவதா ஆய்வுமுடிவுகள் தெரிவிக்குது”
வா: சும்மானாச்சுக்கும் மருந்துன்னு சொல்லி சத்துமாத்திரை கொடுக்கிறதுந்தான் நடக்குது.
அ: “ஹஹ்ஹ்ஹ்ஹா”
வா: “சிரித்து வாழ வேண்டும்”ங்கிறதை நல்லா கடைபிடிக்கிறீங்க
அ: “சரியாச் சொன்னீங்க. இதைத்தான் “இளித்துப் பிழைக்க வேண்டும்”னு எங்களுக்கு சொல்லித் தருவாங்க
[அ – மேலாண்மை அறிவுரைஞன், வா- வாடிக்கையாளன்]
25/10/2013